முதல் பகுதியை படிக்க பகுதி 1
மக்கள் தற்காலத்தில் எளிய மருத்துவத்தை பெரிதும் விரும்புகின்றனர்,இந்த கொரோனா பெரும்தொற்றுக்கு பிறகு தமிழர் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மீது நமக்கு தற்போது பெரிய ஆர்வம் மீண்டும் வந்துள்ளது,சமீபத்தில் உலக சுகாதார மையம் நம் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கொடுத்துள்ளது இதன் மூலம் பல ஆராய்ச்சிகள் சித்த மருத்துவத்தின் மீது நடக்கும்,நம் சித்த மருத்துவத்தின் தொன்மையை, அறிவியலின் துணை கொண்டு ஒரு புதிய பாதைக்குள் பயணம் செய்ய வைக்கமுடியும்,நம் நாட்டு மக்கள் மட்டும் பயன் பெரும் சித்த மருத்துவத்தை உலக மக்கள் அனைவரும் பயன் பெற வாய்ப்புகள் உள்ளன.
இப்போது நாம் நம் கதைக்கு வருவோம்,உணவு மருத்துவம் பற்றி ஏன் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை? சீனா தவிர ஆங்கில மருத்துவத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட உலக நாடுகள் இப்போதுதான் வலுவாக உணவே மருந்து (FOOD IS MEDICINE) என்ற கருத்துக்கள் தங்கள் பாதங்களை எடுத்து வைக்கிறது, தவறான உணவு பழக்கத்தை கடைபிடித்ததின் விளைவு உலகம் முழுவதும் 5 இல் ஒரு இறப்பு சரியான உணவு அதாவது அவர் அவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவு இன்மையால்,உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது,இந்த இறப்பு விகிதம் புகையிலையால் ஏற்படுவதை விட அதிகமாம்.உடலுக்கு ஏற்ற உணவு என்றால் என்ன ?, உணவானது அவர் அவர் வயதிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,உணவானது அவர் அவர் உழைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,இதில் முக்கியமாக நோய்க்கு ஏற்ற உணவு அவசியம், இந்த உணவு தேவை என்பது ஒவ்வொரு நோய்க்கும் மாறுபடும்.
இந்த உணவு மருத்துவம் ஒரு நோய் உள்ளவர்களுக்கு எப்படி பயன் அடைய வைக்கிறது ?
நோய்க்கு அல்லது உடல் சுகமின்மைக்கு குறிப்பிட்ட உணவு வகைகள் ஒரு மருந்தாக செயல் படுகிறது இதை Nutraceuticals மற்றும் Functional Foods என்றால் என்ன, என்பதை பற்றி முதல் பகுதியுள் நான் பேசி உள்ளேன்.
நமக்கு திடிர் என்று ஒரு உடல் நல குறைவு வருகிறது என்று கற்பனை செய்து கொள்வோம்,ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலில் நாம் உள் நோயாளியாக அட்மிட் ஆகிரோம்,மருந்து மற்றும் ஹாஸ்பிடல் செலவு செய்த பில்லுடன் நாம் மருத்துவமனையில் உண்ட உணவு பில்லும் சேர்த்து வரும்,அதில் வரும் உணவின் பில்லோ நமக்கு வழங்கிய மருந்தின் அளவே வரும், ஆனால் நாம் உண்டது கீச்சாதி,இட்டிலி போன்றவையாக இருக்கும், கேட்டால் ஹாஸ்பிடல் டயட் என்று கூறுவார்கள்.என்ன cm அம்மா 1 கோடி ரூபாய்க்கு இட்டிலி சாப்பிட்ட கதை போன்று உள்ளதா ?அந்த மருத்துவமனைகளில் ஏன் அவ்வளவு உணவு தொகை வாங்குகிறார்கள் என்று தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.
Medically Tailored Meals (MTM) என்றால்
என்ன ?
Medically Tailored Meal ( MTM) என்றால் அவர் அவர் நோய் நிலைக்கு ஏற்ற உணவுகளை, உணவியல் நிபுணர்களால் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களால் சரியான முறையில் நோயின் நிலை அறிந்து நோய் நிலையை மேம்படுத்த பரிந்துரை செய்யப்படும் உணவுகளாகும்.
1980 இதில் அமெரிக்காவில் HIV /AIDS நோய்க்கான சரியான மருந்து கண்டுபிடிக்காத போது, அந்த நோயாளிகளுக்கு நோய் முற்றாமல் நோயை சிறந்த ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகளை கொடுத்து மருத்துவம் செய்தனர்,இதனால் அந்த நோயாளிகளின் நோய் குறைந்தது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.இதில் இருந்து உணவே மருந்து ( Food as medicine) என்ற இயக்கம் அமெரிக்காவில் வளர தொடங்கியது.இதில் இருந்துதான் உணவே மருந்து medically tailored meal (MTM) சாக மேலை நாடுகளில் உருவானது .நமது கொரோனா கால கட்டத்திலும் MTM போன்ற உணவு வகைகளை,ஊட்டச் சத்து மற்றும் உணவு நிபுணர்கள் நமக்கு பரிந்துரை செய்தனர்.
MTM இதனால் என்ன பயன் ?
தங்களது நோய்களுக்கு சரியான உணவு வகைகளை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு, மாதம் தங்களது மருத்துவ செலவில் 16 % பணத்தை சேமிப்பு செய்கின்றனராம்.மேலும் நாள்பட்ட நோய் உள்ள நோயாளிகள் இந்த உணவே மருந்தை (MTM ) பின்பற்றும்போது 50 % வரை அவர்கள் நோய்க்கு மருத்துவமனைக்கு வருகை தரும் எண்ணிக்கை குறைகிறதாம்.தற்போது வெளிநாடுகளில் pharmacy நிறுவனங்களுக்கு பிறகு,சில நிறுவனங்கள் medically tailored meals- சை வீட்டிற்க்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள்.இதை நகைப்பாக farmacies என்று கூட கூறுகின்றனர் ,கூடிய விரைவில் இந்த வகை உணவுகளை நம் நாட்டில் உள்ள உணவு சேவை நிறுவங்களிலும் காண வாய்ப்பு உள்ளது.
MTM பற்றி சித்த மருத்துவம் என்ன கூறுகிறது ?
முதலில் பத்தியம்( Regimen of Diet ) என்றால் என்ன என்பதை காண்போம், சித்த மருத்துவத்தில் பத்தியம் என்பது நோய்க்கு மட்டும் அல்லாமல் நாம் எதுத்துக்கொள்ளும் மருந்துக்கும் கூறப்பட்டுள்ளது,பத்தியம் என்பது அந்த நோய்க்கு சேர்க்க வேண்டிய உணவு பொருட்களையும்,சேர்க்க கூடாத உணவு பொருட்களையும் கூறுகிறது.இப்படி பட்ட பத்திய வகைகளில் உப்பில்லா பத்தியம், இச்சா பத்தியம்,கடும் பத்தியம் போன்ற நோய்க்கு ஏற்றவாரு பல வகை பத்தியங்கள் உள்ளன.இப்படி ஒரு நோயாளிக்கு பத்தியம் கூறும் போது அவர்களின் உடல் பலம்,உடல் நிலைமை,நோயின் வன்மை,காலம் மற்றும் சீதோஷண நிலை இவைகளை சரியான படி அனுசரித்து பத்திய முறை சித்த மருத்துவர்கள் கூறுவார்கள்.
பத்தியத்தின் பெருமை:
''பத்தியத்தா லுண்டாகும் பண்டிதற்குப் பேராண்மை
பத்தியத்தா லுண்டாகும் பண்டிதங்கள் - பத்தியத்தை
விட்டிடலை விட்டார் பிணிவகைகள் வித்தரிக்கும்
விட்டாற் பறக்கும் வினை”
-தேரன் வெண்பா செய்-600.
பத்தியத்தை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவம் செய்யும் மருத்துவனும்,மருந்தும் மேன்மை கொள்வார்கள், மேலும் நோயாளியும் குணமடைவான் ,அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் நோய் மிகும்.இப்படி பத்தியத்தின் பெருமை பற்றி சித்த மருத்துவம் கூறுகிறது.
எனவே பத்திய முறையுடன் மருந்தை மருத்துவர் கூறும்படி பின்பற்றினால் நோய் தீருவது சுலபம் என்று புரிகிறது,இங்கு பத்தியம் கடைபிடிக்கவில்லை நோய் தீராது அல்லது மிகும் என்று கூறி உள்ளனர்,இது ஏன் என்று நாம் ஒரு உதாரணத்தோடு காண்போம் சர்க்கரை நோய் வந்த நபர், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட மருந்தை ஒரு குறிப்பிட்ட டோஸேஜில் எடுத்து கொள்கிறார் என்றால், அவர் சரிவர உணவு கட்டுபாடு (அதிக சர்க்கரை சத்து உள்ள பொருட்களை தவிர்த்தல்) அல்லது Regimen of Diet அல்லதுபத்தியம் இல்லை என்றால் நோய் அப்போதைக்கு கட்டுக்குள் வரும், ஆனால் நாள்பட நாள்பட நோய் அந்த மருந்துக்கு கட்டுப்படாது,நோய் மிகும் பிறகு முன்பு கொடுத்த மருந்தை விட வீரியம் மிக்க வேறு மருந்தை தர வேண்டும்,
இப்படிதான் நோய் தீராது என்று கூறி உள்ளனர்.சித்த மருத்துவத்தில் பத்தியம் என்றால் பெரிய வார்த்தையாக மக்கள் காண்கிறனர், ஆனால் இங்கு பத்தியமகா கூறுவதோ நம் நாட்டு உணவு வகைகளைதான் ஆனால் அதில் கொஞ்சம் வித்யாசம், அது எப்படி என்றால் சில நோய்களுக்கு காய்கறிகளை முற்றியதாக உணவில் சேர்க்க சொல்லாமல் பிஞ்சாக எடுக்க கூறுவோம். உதாரணம் கத்தரி பிஞ்சு,முருங்கை பிஞ்சு,அவரை பிஞ்சு போன்றன வாத நோய்க்கு சிறந்த பத்திய உணவு.வாழை கச்சல் சர்க்கரை நோய்க்கு சிறந்த பத்திய உணவு.
என்னிடம் வருபவர்கள் சிலர் சித்த மருத்துவத்தில் பத்தியம் சொல்விங்க சார் அதான் நிறைய பேர் உங்க மருத்துவத்த விரும்பமாட்டங்கிறாங்க என்று கூறுவார்கள்,எனக்கு சிரிப்பாக இருக்கும்,ஆனால் சித்த மருத்துவத்தில் கூறும் பத்திய முறை போலதான் தற்காலத்திய Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இருக்கிறது,அனால் எனது பார்வையில் பத்திய முறையே என்பது இதை விட மேம்பட்டதாக கருதுகிறேன்.பழைய சாதம் எப்படி Inflammatory Bowel Disease நோய்க்கு சிறந்ததோ, அப்படி பல உணவு வகைகள் பத்திய உணவாக சித்த மருத்துவத்தில் உள்ளன.
சித்த மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் பலவகையான Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இந்த உலகுக்கு கிடைக்கும்.
தொடரும் ….