திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

நோய்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய்களும் தீர்வுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூலை, 2023

Chronic Fatigue Syndrome என்னும் சோர்வு நோய்

     நாள் முழுவதும் அதிக சோர்வு, கவனக் குறைவு, தூக்கமின்மை, உடல்  உறுப்புகளின் கோளாறுகள், உடல் வலி, தலைபாரம் மற்றும் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் , எப்போதும் தூங்கி கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் போன்ற நோய்க் குறிகுணங்களை கொண்டு நிரந்தர மற்றும் நிலையான சோர்வு நிலைக்கு வழி வகுக்கும் நோய். இந்த சோர்வு நோய் ஆறு மாதங்களுக்கு மேலும் நீடிக்குமானால் அதை நாள்பட்ட சோர்வு நோய் நிலை என்று அழைக்கப்படும். பாதிக்கபட்டவரின் வாழ்க்கை தரம் பெரும் அளவில் பாதிக்கப்படும்.   அதனால், முன்னரே நோயை கண்டறிந்து தக்க மருத்துவம் செய்தால் பாதிக்கப்பட்டவரை மிக எளிதாக குணப்படுத்தலாம்.

 காரணங்கள் 

இந்த நோய் குறிப்பிட்டு இல்லாமல் பல காரணங்களால் உருவாகலாம் அவை, 

1. மரபியல் ரீதியாக ஒரு குடும்பத்திற்கு உள்ளே இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். உதாரணம் ஒரு தாய்க்கோ அல்லது தந்தைக்கோ இந்த நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் வர வாய்ப்பு அதிகம்.

2. சிலருக்கு சில வகை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு பிறகு இந்த நோய் நிலை உருவாகும்.

3. உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகள் சொல்லபோனால் சாலை விபத்து, அறுவை சிகிச்சை அல்லது நாம் நேசித்த ஒருவரை இழக்கும் போது வரும் உணர்வு ரீதியான பாதிப்புகளை தொடர்ந்து இந்த நோய் உண்டாக்கும்.

4. உணவு முறையில் உள்ள பாதிப்புகளான சரியான சத்தான உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பதும் மற்றும் உணவு வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறு போன்றவை தொடர்ந்து இந்த நோய் நிலையை உண்டாக்கும். மேலும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்த்தல் போன்றவற்றால் நமது தூக்க சுழற்சியில் பாதிப்பு உண்டாகி இந்த நோய் நிலை உண்டாகும். மேலும் வைட்டமின் டி என்னும் சத்து குறைபாடு போன்றவை  இந்த நோய் உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று.

5.சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் உண்டாகும். குறிப்பாக,  ஆண்களை விடவும் பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

6.ஃபைப்ரோமயால்ஜியா, தைராய்டு சுரப்பி கோளாறு, மன அழுத்த நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குதல் உண்டாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

7. திடமான மனநிலை இல்லாதவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

8. அதிர்ச்சிகரமான செய்தி மற்றும் சம்பவங்கள் பார்த்தல் போன்றவை இந்த நோய் நிலையின் குறிகுணங்களை அதிகரிக்கும்.

சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வை சித்தர்கள் சொல்லி வைத்து சென்று உள்ளனர்.

    ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அமுக்குரா கிழங்கு சூரணம், திரிகடுகு சூரணம், பிரமி சூரணம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். நாள்பட்ட நிலையில் உள்ளவர்கள் உள் மருந்துகளுடன் சித்த மருத்துவ புற மருத்துவ சிகிச்சைகளான வேது, பொட்டணம், தொக்கணம், நசியம், யோக மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளை பெற்று விரைவில் நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார். கி
8778587349.


சனி, 7 ஜனவரி, 2023

தங்க பஸ்பமும் எம்ஜிஆரும்

  இந்திய மக்களுக்கும் தங்கத்திற்கும் ஒரு நீங்காத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது,கடந்த 2021 வருடத்தில் இந்திய இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு சராசரியாக ஆயிரம் டன்.

தங்கத்தினை ஆபரணமாக மக்கள் பயன்படுத்திய காலம் தொட்டு சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
தங்க பற்பத்தை பற்றி அறியிம் முன் முதலி பற்பம் என்றால் என்ன என்பதையும்,அதன் அறிவியல் விளக்கத்தையும் நாம் முதலில் காண்போம்.
பற்பம் என்றால் சாம்பல் அல்லது நீரு , சித்த மருத்துவத்தில் ஒரு மூலிகையை அல்லது தாது பொருட்களை முறைப்படி பற்பமாக்கி நம் உடல் ஏற்க்கும் வன்னம் நோய்களுக்கு மருந்தாக தருவதாகும்.இப்படி செய்பட்ட  பற்பத்தை calcined oxide என கூறுவர், இந்த முறையை பற்பமாக்குதல் என கூறுவர்.
    இதை நவீன அறிவியலில்  நாம் 12 வகுப்பு புத்தகத்தில் உள்ள  Calcination process என கூறும் முறையாகும், calcination process என்பது நீராக்குதல் அல்லது சுண்ணாமாக்குதல் என பொருள்,ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒரு இராசாயன பொருளை ஒரு குறிப்பிட்ட சுற்றுபரத்தில் வெப்பம் அடைய வைக்கும் போது அதில் உள்ள கழிவு பொருகள் நீங்கி அது சுண்ணம் ஆன நிலை அடையும்.

      சித்த மருத்துவத்தில் இந்த முறை எப்படி என்றால், பற்பம் ஆக்க வேண்டிய மூலிகை அல்லது தாது பொருள்களை ( தாது பொருள்கள் என்றால் உலோகம், உயிருள்ள சீவன்கள் மற்றும் மண்ணில் உள்ள தாது பொருள்கள்) முறைப்படி சுத்தி செய்து (சுத்தி செய்தல் என்றால்  மருந்தாக மாற உள்ள பொருள்களின் நச்சு தன்மை நீக்கும் முறை என சுருங்க கூறலாம்),
பின் அதை முறைப்படி மூலிகை சாறுகள்,திரவம் போன்றவை கொண்டு அறைத்தோ அல்லது அறைக்காமலோ , இரண்டு வாயகன்ற மண் அகல் நடுவில் வைத்து வலுவாக மூடிவிட வேண்டும்.
பின் வரட்டி போன்ற பொருட்களை கொண்டு தீமூட்டி சுடு செய்து, அரைத்து எடுத்து கொள்ளும் முறையாகும்,இந்த முறையை புடம் போடுதல் என கூறுவர் ஆங்கிலத்தில் calcination process என கூறுவர், இப்படி மருந்துக்காக முடித்த பொருள்கள் பெரும்பாலும் calcined oxide -டாக மாறி இருக்கும். 
    இப்படி முடிந்தது பற்பமானது அதன் தன்மைக்கு ஏற்ப பல புடம்  செல்லும்,இதன் மூலம் அந்த மருந்து இலகு தன்மை அடைந்து ஒரு நுண்ணிய நிலை அடையும்.அந்த நிலை என்னவென்றால் அதன் ஒரு மூலக்கூறு   10⁻⁹(nano size)  என்ற நிலைவரை அடையும்.
 தற்போது ஆங்கில மருத்துவத்தில் பிரபலாமாகி வரும் nano medicine,
இதில் உலோக பொருட்கள் மிக நுண்ணிய 10⁻⁹  நானோ size -க்கு மாற்றி நோய்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர், உதாரணமாக தங்கத்தை gold nano particles (Au nps) நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் ஆச்சரியம் என்னவெனில் தங்க பற்பமும் இதே அளவீடு கொண்ட மருந்து, இது  சித்த மருத்துவத்தில் ஆண்டு ஆண்டு காலமாக மேற்கண்ட நோய்களுக்கும் பயன்படுத்திய வருகின்றனர்.மேலும் தங்கத்தினை அடிப்படையாக வைத்துசெய்யப்படும் மருந்துகள் காச நோய், ஆட்டோ இம்யூன் நோய் ரூமடாய்டு ஆர்தரைட்டிஸ் போன்ற நோய், தீவிரதோற்று,ஆண்மை குறைவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 
     அக்காலம் முதலே பற்பம் செந்தூரம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர்,
இவற்றின் மூலக்கூறு அளவும் பெரும்பாலும் 10⁻⁹  அளவுதான்,இது தற்போதை nano medicine உடன் ஒத்துப்போகிறது.
 சரி தங்க பற்பம் கிட்னி ஃபெயிலியரை உண்டாக்குமா ?
   நிச்சயம் உண்டாக்கலாம்,அது எப்படி என்றால்  நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் முக்கிய பங்கு நம் இரு கிட்னிக்குதான்,இதன் கழிவுகளை வடிகட்டும் உறுப்புகளில் எதாவது நச்சு பொருட்கள் அதிகம் சேர்ந்தால் அதன் செயல் தன்மை குறைந்து அது செயல் இழந்து  ஃபெயிலியர் ஆகும். 
      மேற்கண்ட Gold nano particles கிட்னியை பாதிக்கும் தன்மை உள்ளது என ஆய்வுகள் உள்ளன, ஆனால் தங்க பற்பத்தை கையாலும் போது அப்படிப்பட்ட பக்க விளைவுகளை காணப்படுவதில்லை என ஆய்வுகள் கூறுகிறது இதற்கு காரணம் சித்த மருத்துவத்தில் தங்கத்திற்கு  செய்யபடும் சுத்தி மற்றும் பற்பம் ஆக்கும் முறையேஆகும்,ஆனால் இதில் ஏதாவது ஒரு முறை சரிவர செய்யாமல் விட்டாலும் சரியான முறையில் மருந்து அளவு(dosage) தவறினாலும் மருந்தின் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம்‌.


எம்ஜியாருக்கும் தங்க பற்பத்திற்கும் என்ன தொடர்பு ?
  அக்காலத்தில் அவர் தங்க பற்பத்தை பயன்படுத்தியதாகவும், அந்த மருந்தால் அவருக்கு உடல் நிலை குன்றியதாகவும் கூறுகிறார்கள்.இது ஒரு  செவிவழிச் செய்திதான் ஆதார பூர்வ தகவல் எதுவும் இல்லை, உண்மையில் சித்த மருத்துவத்தின் மீது மாற மதிப்பு கொண்ட தமிழக முதல்வர்களில் அவரும் ஒருவர் அவர் ஆட்சி காலத்தில் சித்த மருத்துவத்திற்கு பெரும் தொண்டு செய்தார்.
 மேற்கண்ட செய்தி இன்னும் நம்மிடம் சுற்றி கொண்டிருந்தாலும், தங்க பற்பம் பக்க விளைவுகள் அற்றது என்பது தற்கால ஆய்வு முடிவுகளே நமக்கு உணர்த்துகிறது.

  நன்றி, சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி தொடர்புக்கு 8778587349.
இந்த கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1)https://benthamopen.com/FULLTEXT/TONMJ-5-16#:~:text=Zinc%20oxide%20nanoparticles%20have%20many,to%20alleviate%20their%20toxic%20effects.
2)https://www.sciencedirect.com/topics/medicine-and-dentistry/gold-nanoparticle#:~:text=Au%20NPs%20have%20been%20used,cancer%20types%20and%20diseased%20organs.
3)https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6320918/#:~:text=The%20advantages%20of%20noble%20metal,positive%20effect%20on%20biological%20systems.
4)COMPARATIVE IN-VITRO ANTICANCER ACTIVITY OF THANGA PARPAM (SIDDHA GOLD DRUG)IN BREAST, LIVER, PROSTATE AND LUNG CANCER CELL LINES
Sulthan Shajahan, Arul Amuthan.
5) குணபாடம் : தாது - சீவ வகுப்பு by மருத்துவர் தியாகராஜன்

வியாழன், 29 டிசம்பர், 2022

சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிற (ஆதுலர் சாலை)மருத்துவமனை மற்றும் மருத்துவ குறிப்புகள்.

     சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிற மருத்துவமனை மற்றும் மருத்துவ குறிப்புகள்

          சங்க காலம் தொட்டு கிபி 13ம் நூற்றாண்டுவரை சோழர்கள் தென்னிந்திய பகுதி மட்டும் இன்றி வடக்கு மற்றும் உலகெங்கும் ஆண்ட பெருமை அனைவருக்கும் அறிவோம், தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரிய ஆலயங்களை கட்டியதோர் அல்லாமல் அவ்வாலயங்களில் மக்களின் பிணி தீர்க்க ஆதுலர் சாலை அதாவது மருத்துவமனை போன்றவற்றையும்அமைத்துள்ளனர்.
            இச்செய்திகளை நாம் அறிவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தவை அக்காலத்தில் நம் முன்னோர்கள் செதுக்கிய கல்வெட்டுகளே ஆகும்.
           திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவதுறை, கீரகலூர், கடத்தூர்,  கூகூர் இனிய ஊர்களில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகளில் அக்காலத்து சோழர் பயன்படுத்திய மருத்துவம் பற்றியும் அவர்தம் நடத்திய மருத்துவமனை பற்றியும் விவரங்களை தெரிவிக்கின்றன.

திருமுக்கூடல் ஆதுலர் சாலை
  குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில். கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ள விவரம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வீர சோழன் ஆதுலர் சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடந்து வந்துள்ளது, அங்கு பணிபுரிந்த தலைமை மருத்துவர் பெயர் "கோதண்ட ராம அஸ்வத்தாம பட்டன்" என்று மருத்துவமனை வேலை செய்யும் பணியால் பற்றி விவரம் கிடைக்கப்பெறுகிறது, மேலும் இக் கல்வெட்டில் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் எவ்வளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன என்ற விவரத்தோடு எப்படிப்பட்ட உணவுகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டன அந்த மருந்துகளை எப்படி பாதுகாத்தனர் போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
அக்காலத்தில் வீரசோழன் ஆதுலர் சாலையில் இரண்டு வகை மருத்துவர்கள் இருந்தனர் ஒருவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவர் மற்றொருவர் இரண அறுவை சிகிச்சை செய்பவர்.
அவர்களில் நாடிப் பார்த்து மருந்து கொடுப்பது தலைமை மருத்துவர் "கோதண்ட ராம அசுவத்தாம பட்டன்" இவர் வம்சாவழியாக இத்தொழிலை செய்ய உரிமை பெற்றதோடு இவருக்கு குடையாக 90 கலம் நெல்லும், 80 காசுகளும் அல்லாமல் நிலத்தையும் கொடையாக கொடுத்துள்ளனர், இவ்வாறு மருத்துவத்திற்கு கொடையாக கொடுக்கப்படும்  நிலத்திற்கு மருத்துவகாணி என்று பெயர்.
அறுவை மருத்துவம் செய்பவர்கள் பெயர் "சல்லிய கிரியை(Surgeon) பண்ணுவான்", இவருக்கு 30 கலம் நெல்லும்,1 காசும் ஊதியமாக வழங்கப்பட்டது. 
இவ்வாறே மருத்துவ பணி செய்யும் மகளிர்(Nurse), செடி விறகு சேகரித்து வருபவருக்கும், நாவிதற்கும் மருந்து மூலிகைகளை சேகரித்து வைப்பவருக்கும் திருமுக்கூடல் மருத்துவமனையில் தொழிலுக்கு ஏற்றவாறு ஊதியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு நாவிதர்கள் சவரத் தொழில் செய்வதோடு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்த விவரங்களும் கிடைக்கப்படுகிறது.
 இங்கு பயன்படுத்திய சில மருந்துகளின் விவரம் உத்தம சரணாதி தைலம்,பஞ்சாக தைலம், கண்டீர மண்டூக, வேதிகா லசுணாதி மேலும் கோவிலில் வேதம்,வான நூல், கட்டடக்கலை, மருத்துவம், போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டுள்ளன,அவற்றோடு மாணவர் விடுதி வசதியும் இருந்துள்ளது.

சுந்தர சோழன் விண்ணகர் மருத்துவமனை
    குந்தவை பிராட்டி தன் தந்தையை நினைவாக சுந்தர சோழன் விண்ணகர் ஆதுலர் சாலை மருத்துவமனையை நிறுவி வேலை செய்த மருத்துவருக்கு மருத்துவகாணி வழங்கியதாக கல்வெட்டில் காணப்படுகிறது.

திருப்புகலூர் ஆதுலர் சாலை மற்றும் திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரி:
விக்ரம சோழனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிகாலத்தில் திருப்புகலூரில் ஒரு மருத்துவமனை மற்றும் திருவாவடுதுறை ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவியதாக கல்வெட்டுகள் குறிக்கின்றன.

 பிணி நீங்க இறை வழிபாடு:
      பிணி நீங்க இறைவழிபாடும் கோயில்களில் நடத்தப்பட்டுள்ளன தஞ்சை மாவட்டம் கூகூரில் உள்ள கல்வெட்டில் அதிராஜேந்திரன் தன் பிணி நீங்க வழிபாடு நடத்தப்பட்டதாக காணப்படுகிறது மேலும் கொங்கு நாட்டு மன்னன் சோழ தேவன் உடைய 21 ஆம் ஆட்சி ஆண்டில் அவனுடைய அதிகாரியில் ஒருவரான விக்ரம  சோழ திரிபுவன சிங்கத்தேவன் அவரின் மேகப் நோய் தீர்ந்ததால் அவ்வூர் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதாக கோவை மாவட்டம் கடத்தூரில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
    சாதாரணமாக பயிரிடக்கூடிய செங்கழுநீர்(செவ்வாம்பல்)மூலிகையை சோழர் காலத்தில் பயிரிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற  உத்தர இருந்ததாக காணப்படுகிறது.
   வலுதுளை அல்லது வலுதுணை என்ற கண்டங்கத்தரிக்காய் இது கபம் சம்பந்தமான சுவாசக் கோளாறுகளுக்கு பயன்படுத்தும் மூலிகை இது அக்காலத்தில் பயிரிடப்பட்டதாக சேலம் மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிறது. 
நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 8778587349
கட்டுரை எழுத உதவிய நூல்கள்.
1) சோழர் சமுதாயம் புத்தகம் எழுதியவர் முனைவர் வசந்தி. 
2) மூலிகை மணி இதழ் ஆசிரியர் க.வேங்கடேசன்.
Facebook.kaveri siddha
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL