சனி, 7 ஜனவரி, 2023

தங்க பஸ்பமும் எம்ஜிஆரும்

  இந்திய மக்களுக்கும் தங்கத்திற்கும் ஒரு நீங்காத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது,கடந்த 2021 வருடத்தில் இந்திய இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு சராசரியாக ஆயிரம் டன்.


தங்கத்தினை ஆபரணமாக மக்கள் பயன்படுத்திய காலம் தொட்டு சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
தங்க பற்பத்தை பற்றி அறியிம் முன் முதலி பற்பம் என்றால் என்ன என்பதையும்,அதன் அறிவியல் விளக்கத்தையும் நாம் முதலில் காண்போம்.
பற்பம் என்றால் சாம்பல் அல்லது நீரு , சித்த மருத்துவத்தில் ஒரு மூலிகையை அல்லது தாது பொருட்களை முறைப்படி பற்பமாக்கி நம் உடல் ஏற்க்கும் வன்னம் நோய்களுக்கு மருந்தாக தருவதாகும்.இப்படி செய்பட்ட  பற்பத்தை calcined oxide என கூறுவர், இந்த முறையை பற்பமாக்குதல் என கூறுவர்.
    இதை நவீன அறிவியலில்  நாம் 12 வகுப்பு புத்தகத்தில் உள்ள  Calcination process என கூறும் முறையாகும், calcination process என்பது நீராக்குதல் அல்லது சுண்ணாமாக்குதல் என பொருள்,ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் ஒரு இராசாயன பொருளை ஒரு குறிப்பிட்ட சுற்றுபரத்தில் வெப்பம் அடைய வைக்கும் போது அதில் உள்ள கழிவு பொருகள் நீங்கி அது சுண்ணம் ஆன நிலை அடையும்.

      சித்த மருத்துவத்தில் இந்த முறை எப்படி என்றால், பற்பம் ஆக்க வேண்டிய மூலிகை அல்லது தாது பொருள்களை ( தாது பொருள்கள் என்றால் உலோகம், உயிருள்ள சீவன்கள் மற்றும் மண்ணில் உள்ள தாது பொருள்கள்) முறைப்படி சுத்தி செய்து (சுத்தி செய்தல் என்றால்  மருந்தாக மாற உள்ள பொருள்களின் நச்சு தன்மை நீக்கும் முறை என சுருங்க கூறலாம்),
பின் அதை முறைப்படி மூலிகை சாறுகள்,திரவம் போன்றவை கொண்டு அறைத்தோ அல்லது அறைக்காமலோ , இரண்டு வாயகன்ற மண் அகல் நடுவில் வைத்து வலுவாக மூடிவிட வேண்டும்.
பின் வரட்டி போன்ற பொருட்களை கொண்டு தீமூட்டி சுடு செய்து, அரைத்து எடுத்து கொள்ளும் முறையாகும்,இந்த முறையை புடம் போடுதல் என கூறுவர் ஆங்கிலத்தில் calcination process என கூறுவர், இப்படி மருந்துக்காக முடித்த பொருள்கள் பெரும்பாலும் calcined oxide -டாக மாறி இருக்கும். 
    இப்படி முடிந்தது பற்பமானது அதன் தன்மைக்கு ஏற்ப பல புடம்  செல்லும்,இதன் மூலம் அந்த மருந்து இலகு தன்மை அடைந்து ஒரு நுண்ணிய நிலை அடையும்.அந்த நிலை என்னவென்றால் அதன் ஒரு மூலக்கூறு   10⁻⁹(nano size)  என்ற நிலைவரை அடையும்.
 தற்போது ஆங்கில மருத்துவத்தில் பிரபலாமாகி வரும் nano medicine,
இதில் உலோக பொருட்கள் மிக நுண்ணிய 10⁻⁹  நானோ size -க்கு மாற்றி நோய்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர், உதாரணமாக தங்கத்தை gold nano particles (Au nps) நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் ஆச்சரியம் என்னவெனில் தங்க பற்பமும் இதே அளவீடு கொண்ட மருந்து, இது  சித்த மருத்துவத்தில் ஆண்டு ஆண்டு காலமாக மேற்கண்ட நோய்களுக்கும் பயன்படுத்திய வருகின்றனர்.மேலும் தங்கத்தினை அடிப்படையாக வைத்துசெய்யப்படும் மருந்துகள் காச நோய், ஆட்டோ இம்யூன் நோய் ரூமடாய்டு ஆர்தரைட்டிஸ் போன்ற நோய், தீவிரதோற்று,ஆண்மை குறைவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 
     அக்காலம் முதலே பற்பம் செந்தூரம் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர்,
இவற்றின் மூலக்கூறு அளவும் பெரும்பாலும் 10⁻⁹  அளவுதான்,இது தற்போதை nano medicine உடன் ஒத்துப்போகிறது.
 சரி தங்க பற்பம் கிட்னி ஃபெயிலியரை உண்டாக்குமா ?
   நிச்சயம் உண்டாக்கலாம்,அது எப்படி என்றால்  நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் முக்கிய பங்கு நம் இரு கிட்னிக்குதான்,இதன் கழிவுகளை வடிகட்டும் உறுப்புகளில் எதாவது நச்சு பொருட்கள் அதிகம் சேர்ந்தால் அதன் செயல் தன்மை குறைந்து அது செயல் இழந்து  ஃபெயிலியர் ஆகும். 
      மேற்கண்ட Gold nano particles கிட்னியை பாதிக்கும் தன்மை உள்ளது என ஆய்வுகள் உள்ளன, ஆனால் தங்க பற்பத்தை கையாலும் போது அப்படிப்பட்ட பக்க விளைவுகளை காணப்படுவதில்லை என ஆய்வுகள் கூறுகிறது இதற்கு காரணம் சித்த மருத்துவத்தில் தங்கத்திற்கு  செய்யபடும் சுத்தி மற்றும் பற்பம் ஆக்கும் முறையேஆகும்,ஆனால் இதில் ஏதாவது ஒரு முறை சரிவர செய்யாமல் விட்டாலும் சரியான முறையில் மருந்து அளவு(dosage) தவறினாலும் மருந்தின் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம்‌.


எம்ஜியாருக்கும் தங்க பற்பத்திற்கும் என்ன தொடர்பு ?
  அக்காலத்தில் அவர் தங்க பற்பத்தை பயன்படுத்தியதாகவும், அந்த மருந்தால் அவருக்கு உடல் நிலை குன்றியதாகவும் கூறுகிறார்கள்.இது ஒரு  செவிவழிச் செய்திதான் ஆதார பூர்வ தகவல் எதுவும் இல்லை, உண்மையில் சித்த மருத்துவத்தின் மீது மாற மதிப்பு கொண்ட தமிழக முதல்வர்களில் அவரும் ஒருவர் அவர் ஆட்சி காலத்தில் சித்த மருத்துவத்திற்கு பெரும் தொண்டு செய்தார்.
 மேற்கண்ட செய்தி இன்னும் நம்மிடம் சுற்றி கொண்டிருந்தாலும், தங்க பற்பம் பக்க விளைவுகள் அற்றது என்பது தற்கால ஆய்வு முடிவுகளே நமக்கு உணர்த்துகிறது.

  நன்றி, சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி தொடர்புக்கு 8778587349.
இந்த கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1)https://benthamopen.com/FULLTEXT/TONMJ-5-16#:~:text=Zinc%20oxide%20nanoparticles%20have%20many,to%20alleviate%20their%20toxic%20effects.
2)https://www.sciencedirect.com/topics/medicine-and-dentistry/gold-nanoparticle#:~:text=Au%20NPs%20have%20been%20used,cancer%20types%20and%20diseased%20organs.
3)https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6320918/#:~:text=The%20advantages%20of%20noble%20metal,positive%20effect%20on%20biological%20systems.
4)COMPARATIVE IN-VITRO ANTICANCER ACTIVITY OF THANGA PARPAM (SIDDHA GOLD DRUG)IN BREAST, LIVER, PROSTATE AND LUNG CANCER CELL LINES
Sulthan Shajahan, Arul Amuthan.
5) குணபாடம் : தாது - சீவ வகுப்பு by மருத்துவர் தியாகராஜன்

0 comments:

கருத்துரையிடுக