செவ்வாய், 17 ஜனவரி, 2023

கசகசா - சித்த மருத்துவம்

    உலக மக்கள் உணவே மருந்து என்ற நோக்கத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டனர்,அப்படிப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த உணவுகளில் ஒன்று தான் நம் வீட்டில் உள்ள கசகசா.இந்த கட்டுரையில் கசகசாவின் வகைகள்,வரலாறு, உலக அளவில் உணவுகளில் செய்யப்படும் கசகசாவின் பங்கு, அதில் கலப்படம் பின் முக்கியமாக சித்த மருத்துவத்தில் அதன் மருத்துவ தன்மை போன்றவற்றை காண்போம.

            அபின் செடியின் விதைதான் கசகசா, இது அபின் காய் பழுத்த பின்பு அதன் ஓடு காயவைத்து சேகரிக்க படுகிறது.இருப்தியோராம் ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாப்பி செடியின் அபினில்லிருந்து எடுக்கப்படும்  அல்கலாயிடுகல்  மருத்துவ ரீதியாக பயன்படுத்தவும் அதன் விதைகள் உணவுத் துறையில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வம் ஆக்கப்பட்டது.                           இந்தியா,ஆஸ்திரேலியா,துருக்கி,கனடா,மத்தியஅமெரிக்கா,தென்அமெரிக்கா,செக்குடியரசு,பிரான்ஸ்,போலந்து,அங்கிரி,ஈராக்,போலந்து,ரோமேனியா,ஸ்பெயின்,யுகஸ்லோ-வியா, நாடுகளில் அபின் பயிர் இடுவது சடட்ப்பூர்வமாக நடைபெறுகிறது.
                                        
 மனித நாகரிகத்தில் முதன் முதலில் 5000 கிமுவில் மெசபடோமியா பகுதியில்(இப்போதையகுவைத்,ஈராக் பகுதி) அபினி செடி அதன் பால் அதாவது அபினி மற்றும் விதைகளுக்காக  பயிரிட பட்டுள்ளது.அபின் மற்றும் கசகசாவை சுமேரியர்,கிரீட் போன்றவர்கள் பழங்காலம் முதலே உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.கிரீடில் இருந்த மினோவான் நாகரிகத்தில் கசகசாவை பால் மற்றும் தேனில் கலந்து அடிக்கடி அழும் குழந்தைகளுக்கு தந்துள்ளனர்.
                    உலக அளவில் கசகசாவின் நிறத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,அவற்றில் பொதுவாக உள்ள நிறங்கள் அவைகருப்ப,நீலம், கருநீலம்,வெள்ளை,நம் நாட்டில் பெரும்பாலும் வெள்ளை நிற கசகசாவை பயன்படுத்துகிறோம் ஜெர்மனியில் நீல நிறம் கசகசாவை பெரியதாக பயன்படுத்தி வருகின்றனர்.
               நம் இந்திய நாட்டில் உள்ள வெள்ளை நிற கசகசாவிற்கு மதிப்பு அதிகம், இது உணவை அழகு படுத்த சேர்க்கப்படும் போது அந்த உணவின் உருவ தன்மை மற்றும் நிறம் பெரிய அளவில் மாற்றம் அடையாமல்  இருபதால்  இது விரும்பத்தகாத உள்ளது. 


                     அபினியில் உள்ள நச்சு தன்மை கசகசாவில் மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது. குறிப்பாக  மார்பின்,திபெய்ன் போன்ற அல்களாடுயுகள். அபினியில் காணப்படுவதை விட மிக மிக குறைந்த அளவில் காணப்படுகிறது.

                     ஆனால் சிலர் இது உணவில் பயன் படுத்தும் போது அந்த குறிப்பிட்ட உணவிற்கு அடிமையாக்கும் தன்மை உண்டாக்குவதாக சிலர் நம்புகின்றனர்.



பாப்பி டீ :
  
                     கசகசாவில் இருந்து தயாரிக்கப்படும் பானம் பாப்பி டீ (கசகசா டீ), இது ஒருவிதமான போதைக்காக தயாரிக்கப்படுகிறது, அபின் செடியை விதைகாக அறுவடை செய்த பிறகும், அதன் மீது நஞ்சுத் தன்மை உள்ள அபின் அல்களாடுயுகள் ஒட்டி இருக்கும் இதை நீரில் கலந்து சலவை செய்து எடுத்தால் அது தனியாக பிரிந்து வந்துவிடும்.ஆனால் சிலர் சலவை செய்ய படாத கசகசாவை வாங்கி கொதிக்க வைத்துவ் வடிகட்டி தேனீராக குடிக்கின்றனர். ஆனால் இதை தயாரிக்க பெரிய அளவிலான கசகசா தேவை, ஒரு குறிப்பிட்ட போதை தன்மை உருவாக்க 400 கிராம் கசகசா தேவை, இப்படி தயாரித்த பானம் குடித்த 15 நிமிடத்தில் போதைத் தன்மையை காட்டத் துவங்கும் அது 24 மணி நேரம் வரை கூட நீடிக்கும்,போதைத் தன்மை நீரில் சலவை செய்யாத கசகசாவிற்கு மட்டுமே உள்ளது ஆனால் கசகசாவில் இதன் போதை தன்மை மிகக் குறைவு தான் அறுவடையின் போதுஅதன் மீது ஒட்டிக் கொண்டுள்ள பால்தான் இந்த நச்சுத்தன்மை உருவாக்குகிறது. இந்த மாதிரியான கசகசா தற்போது இணையதளங்களில் அதிகஅளவில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் இந்த பாப்பி டீயை ஊசி வழியாக ரத்த நாளங்களில் செலுத்தி போதை இன்பம் காண்கின்றனர்.இப்படி கசகசாவை போதைக்காக பயன்படுத்துவது நம் நாட்டில் அதிகம் பயன்பாட்டில் இல்லை என்றாலும் வெளிநாட்டினர் இவ்வகை போதைக்கு மிகவும் ஆளாகின்றனர்.இவ்வகை காரணங்களாலே சில உலக நாடுகள் கசகசாவை கூட தடை செய்து வைத்துள்ளனர்.
       
            நம் நாட்டில் கசகசா உணவில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது குறிப்பாக பிரியாணி, குருமா, இனிப்பு வகைகள் இது பெரும்பாலும் சேர்க்கப்பட்டுகிறது. வெளிநாடுகளில் கசகசா கேக்,பிரட், பேக்கரியில் உள்ள உணவு பொருட்கள் போன்றவற்றில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது, இன்னும் பல உணவு குறிப்புகளில் முக்கிய பொருளாக வெளிநாட்டினர் பயன்படுத்துகின்றனர்.

        இப்படி பயன்படுத்தி வரும் கசகசாவில் பெரும் அளவில் கலப்படம் செய்யப்படுவதுதான் நாம் எதிர் நோக்கும் விசயம்.அதிகப்படியாக செய்ய படும் இரண்டு கலப்படங்கள்.


1) முளைக்கீரையின்(Amaranthus Paniculatu) விதைகள்,இது கசகசாவுடன் பெரிய அளவில் கலப்படம் செய்யப்படுகிறது.
இதற்கான காரணம் கசகசாவின் விதை பார்பதற்கு சிறுநீரக வடிவில் காணப்படுகிறது, இதன் வடிவத்தை போலவே முளைக்கீரையின் விதைகளும் இருப்பதால் கலப்படக்கரார்களுக்கு எளிதாக கலப்படம் செய்யப்படுகிறது.
2) மைதா மாவு மற்றும் ரவை  போன்றவற்றை சிறிது நீர்விட்டு கலந்து, சிறிது நேரம் காயவைத்து பின் தகுந்த கண் உள்ள சல்லடையில் சலித்து எடுத்தால் செயற்கை கசகசா ரெடி.இதை அசல் கசகசாவிற்க சமபங்கு கலந்து விட்டால் போதும்,அசல் போலி வித்தியாசம் தெரியாது.
    மேற்கண்ட கலப்படங்கள் உடலிற்கு எந்த விட தீங்கும் உண்டாக்கது என்றாலும், உண்மையான பொருள் என்று நம்பி வாங்கும் வாடிக்கையாளர்களின் நிலைஎன்ன?
  மேற்கண்ட கலப்படங்கள் உண்மை தன்மை கண்டறி நிறை சோதனை வழிமுறைகள் நம் உணவு பாதுகாப்பு துறையுடம் உள்ளது.


இப்படி கலப்படங்கள் கசகசாவில் நாள்தோறும் இருந்த போதிலும்,
கசகசா உணவில் சிறிய பங்குதானே சேர்க்கப்பட்டுகிறது இதை நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரலாம், அதற்கு முன்  நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்,நமது வீட்டு அஞ்சறைப்பெட்டியில் கடுகு, சீரகம்,மிளகு, மஞ்சள் இவைகளுடன் கசகசாவும் ஒரு இடம் உண்டு,அஞ்சறைப்பெட்டியில் உள்ள அனைத்து பொருள்களை உணவாக பயன்படுத்தியது  மட்டும் இன்றி நாம் அவசர தேவைக்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தி வந்தோம்.உதரணமாக நம் பாட்டி நாம் குழந்தைகளாக இருந்தா போது  வயிற்றோட்டம் (பேதி)கண்டவுடன் கசகசாவை நீர் விட்டு அரைத்து தந்துள்ளார் மேலும் இரவில் நன்றாக தூக்கம் வரவும், ஆண்மை பெருகவும் கசகசா இலேகியம் போன்ற மருந்துகளை  நாம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
சித்த மருத்துவம் கசகசாவை பற்றி என்ன சொல்கிறது.

"கிருமி நமைச்சல் கிராணியதி சாரஞ்சிரநீர் அநித்திரைபோஞ் செப்பில்-உருவழகுங் காந்தியுமுண் டாகுங் கசகசா வின்குணத்தைத் தேர்ந்தவர்க்கு விந்துவுமாந் தேர்"
             - அகத்தியர் குண வாகடம்

கசகசாவினை  மருந்தாக பயன்படுத்தும்போது குடலில் உள்ள புலுக்கள், உடலில் உண்டாகும் நமைச்சல்( சொறி), பேதி,தூக்கம் இன்மை,தலைக்கனம், போன்றவை விலகும்.உடல் வன்மை, அழகு, ஆண்மை இவை உண்டாக்கும் என கூறுகிறது.
      இப்படிப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த கசகசாவில் கலப்படம் இருந்தால் அதன் உண்மையான மருத்துவ குணம் நாம் பயன்படுத்தும் போது நிச்சயம் கிடைக்காது.முடிந்த அளவில் உணவு காப்புறுதி பெற்ற கசகசாவை வாங்கி பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.



நன்றி,
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி காவேரி சித்தா கிளினிக் சேலம்.
தொடர்புக்கு 8778587349








0 comments:

கருத்துரையிடுக