சனி, 21 ஜனவரி, 2023

கஞ்சாவும் - சித்த மருத்துவம்

                             மரிஜுவானா,டோப், வீட், போன்ற வார்த்தைகளை இதற்கு முன் உங்களில்  சிலருக்கு மிகப் பரிச்சயமாக இருக்கலாம் அல்லது பல பேருக்கு புதியதாக  இருக்கும். இவை அனைத்தும் கஞ்சாவின் வேறு பெயரை குறிக்கும் .இந்த கட்டுரையில்  கஞ்சாவின் அரசியல்,வரலாறு, மருத்துவ பயன்கள் போன்ற அறியப்படாத செய்திகள் பற்றி நாம் காண்போம்.

கஞ்சா மீதுள்ள சட்டங்களும் அதன் வரலாறும்.


                                   இந்தியாவில் மயக்க மருந்துப்பொருள் மற்றும் மனநிலைக்கு ஊருசெய்யும் பொருள்கள் சட்டம்,1985 (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985),என்ற  சட்டத்தின்படி கஞ்சா மற்றும் அதனை சார்ந்த உபபொருள்களை நுகர்வதும் மற்றும் கஞ்சாவின்  மலர்,மொட்டு,பிற உபபொருள்களை வைத்து இருபதும்  சட்டவிரோதமான செயலக கருதப்படுகிறது,இதன்படி கஞ்சாவின் பயன்பாடு பல மாநிலங்கலில்  தடை செய்ய ப்படுள்ளது.இதே  சட்டத்தின்  கீழ் அபினும் வருகிறது.

                                   1985 ஆண்டுவரை இந்தியாவில் கஞ்சா,பாங்க்,சாரஸ் போன்றவை சட்டப்பூர்வமாக இருந்தது,ஆனால் அமெரிக்கா 1961 ஆண்டு போதை பொருட்கள் தடுக்க பல பிரச்சாரங்களை உலகம் முழுவதும் மேற்கொள்ளத் தொடங்கியது , இதை இந்திய, கஞ்சா பயன்பாடு  என்பது இந்தியாவின்  வாழ்க்கை முறையில் ஒரு அங்கம் என கூறி  அமெரிக்காவின்  பிரச்சாரத்தை நிராகரித்து வந்தது.எண்பதுகளின் தொடக்க காலத்தில் போதை பொருட்கள் பயன்பாடு என்பது அமெரிக்காவில் விஸ்வரூபம் எடுக்க,அமெரிக்கா தனது  சர்வாதிகாரத்தால் (The Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985) இந்தியாவில் போதை பொருள் தடுப்பு சட்டத்தை   நிறைவேற்றியது.இந்த சட்டமானது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும்,தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் சட்டபூர்வமாக கஞ்சா பயிரிடப்படுகிறது. 


தண்டனைகள்:

                               இந்த சட்டத்தின்படி 1 கிலோகிராம் அளவுக்கு குறைவாக கஞ்சா வைத்திருந்தால் 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,1 கிலோகிராம் மேல் 20 கிலோகிராமுக்கு குறைவாக வைத்து இருந்தால் 10 வருடம் சிறை அல்லது 1 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் ,20 கிலோகிராம் மேலாக வணிக ரிதியாக வைத்து இருந்தால் 10 முதல் 20 வருடம் சிறை அல்லது 1 முதல் 2 லக்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் இதற்கு தண்டனையாக வழங்கப்படும் .அனால் கஞ்சா இலைகளுக்கு சிறிது விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது,உதாரணமாக கஞ்சா இலையில் இருந்து தயாரிக்கப்பதும்  பாங் போன்ற பொருள் இந்தியாவில் அனுமதி உண்டு.

                                        அனால்  ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை கடந்த 2022 ஆண்டு மருத்துவ ரீதியாக மற்றும் மருந்து அடிமைத்துவம் இல்லாமல் பொழுதுபோக்கிற்கு கஞ்சாவை பயன்படுத்த, அமெரிக்கா நாட்டின்  போதை பொருள்  தடுப்பு சட்டத்திலிருந்து கஞ்சாவிற்கு  விதிவிலக்கு அளிக்கப்பட்ட  சட்ட மசோதாவை  நிறைவேற்றியுள்ளது.ஐரோப்பிய நாடுகளும் கஞ்சாவை மருத்துவ ரீதியாக பயன்படுத்த  சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது, இதற்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

வரலாறு:

                                        2200 கிமூவில் கஞ்சாவில் இருந்து வரும் நார்களை கொண்டு ஜப்பானியர்கள், சீனர்கள் துணிகள், கயிறு போன்றவைகளாக பயன்படுத்தி உள்ளனர்.

                                       இந்தியாவில் கஞ்சா பயன்பாடு என்பது 2000 கிமூ முதல் உள்ளது.அதர்வவேதத்தில் 5 புனித தாவரங்களுள் கஞ்சா மன நிலையை சாந்தி செய்யும் தாவரமாக கூறப்படுகிறது. கஞ்சாவானது உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும் காலம் தொட்டு  இந்திய வரலாற்றில் பயணப்பட்டு வந்துள்ளது.சுஷ்ருதா சம்ஹிதாவில், கஞ்சா கண்நோய்,கபம்,பேதி போன்ற நோய்களை போக்கும் மருந்தாக என கூறப்பட்டுள்ளது.

                                       1798 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் பாங்,கஞ்சா,சரஸ் போன்றவற்றின்  புழக்கத்தை கட்டுப்பாடு செய்ய,அதன் மீது தனி வரி வசூல் செய்தது.பின் 1894 ஆம் கஞ்சாவை பற்றிய கள ஆய்வில் கஞ்சா பயன்பாடு என்பது மனிதனில் கோபத்தை அதிகரிக்க செய்து தீய செயல்களுக்கு வழிசெய்வதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

பாங்,தண்டை பானம்: 

                                     பாங்,தண்டை பானம்  என்பது நாம் தமிழ் நாட்டில் கேள்வி படாத  வார்த்தையாக இருந்தாலும்,வட இந்தியாவில் மிகபிரபலமான பானங்கள்.தண்டை அடிப்படையில் மசால பொருகள்,பால் மற்றும் பழ  வகைகளை கொண்டு செய்யப்படும் ஒரு பானமாகும்,பாங் என்பது தயிரை கொண்டு செய்யப்படும் பானம்  என்றாலும் ,இவை இரண்டுக்கும் மூல பொருள் கஞ்சா இலையாகும்.

                                    நமக்கு ஹோலிப் பண்டிகை என்றால் நினைவுக்கு வருவது கலர் கலர் பொடிகள் மட்டும்தான் அனால் வட இந்தியாவில் ஹோலி என்றால் கலர் கலர் பொடிகளுடன்,பாங்,தண்டை  பானங்கள் நினைவுக்கு வரும்.

                                   வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் திருத்தலத்தில் தண்டை பானம்  பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.பாங்,தண்டை பானங்களை  அளவாக உண்டால் உடலுக்கு மிக நம்மை தரக்கூடியது என அங்கு  நம்பப்படுகிறது, சிவன் ஆலகால விஷத்தை உண்ட பிறகு, தொண்டை நீல நிறம் அடைந்ததாகவும்,அந்த வலி போக பார்வதி தேவி பாங்கை அளித்தார் என்று கூறப்படுகிறது.ராஜஸ்தானில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாங் கடைகள்  ஜெய்சல்மர் மற்றும் புஷ்கர் நகரங்களில் உள்ளன.

சரஸ்:

                                     சரஸ் என்பது கஞ்சா செடியில் இருந்து எடுக்கப்பதும் ஒரு  பிசின் போன்ற பொருள்,இது மிக போதை தன்மை கொண்டது,  இது 1  கிராம் அளவில் 2000 ரூபாய் வரைக்கூட விற்பனை செய்யப்பதுகிறது   

கஞ்சா:

                                   தமிழகத்தில் கஞ்சாவின் இலைகள்  பெரும்பாலும்  புகையாக   பிடிக்கப்பதுகிறது, புகைபிடிப்பதற்காக  கிடைக்கப்படும் கஞ்சா இலையானது மஞ்சரி,மகரந்தம்,விதை,இலை காம்பு போன்றவையுடன் கலந்துதான் கிடைக்கும்,புகை பிடிப்பவர் இலையை மட்டும்  தனியாக பிரித்து எடுப்பர்,பின் புகை பிடிப்பதற்கு என பிரத்தியேகமாக விற்கப்படும் OCB பேப்பரை கொண்டு சிகரெட்டே போன்று செய்து புகை பிடிக்கின்றனர்.

கஞ்சாவில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் :

                                     கஞ்சா பல மூலக்கூறு சேர்மங்களைக் கொண்டுள்ளது,அதில்  டெல்டா-9 டெட்ராஹைட்ரோ கன்னாபினோல் (THC) மற்றும் கன்னாபிடியோல் (CBD) ஆகியவை மிகவும் பிரபலமானவை. THC என்பது (கஞ்சாவின்) மரிஜுவானாவின் முதன்மையான மூலப்பொருளாகும், இதற்கு  போதை தன்மையை உண்டாகும் செயல் உள்ளது, கஞ்சாவின் விதை,கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட கஞ்சா எண்ணெய் போன்றவை தற்போது மருந்து சந்தையில்  கிடைக்கிறது,அனால் இந்த பொருள்களில் போதை தன்மை உண்டாகும் THC குறைவாக உள்ளவாறு முறைப்படுத்தி விற்கப்படுகிறது,இப்படி கஞ்சாவில் இருந்து கிடைக்கும் பொருள்களை SUPER FOOD என்று அழைப்பார்கள்.

சித்த மருத்துவத்தில் கஞ்சா:

                                  மேற்கண்டவை நீங்கள் படித்ததால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும், போதைப் பொருள் என்று தடை செய்த ஒரு பொருளை, அதன் மருத்துவ பயனை கண்ட ஏகபத்திய அரசுகள் அதன் தடையை நீக்கி ஒரு ஒழுங்கு முறையில் அதை பயிர் செய்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

                                  இந்த விஷயத்தில் நாம் நோக்க வேண்டியது என்னவென்றால் உலக நாடுகள்  இப்போது பின்பற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் 2000 ஆண்டுகளுக்கு  முதலே  சித்த மருத்துவத்தில்  நடைமுறையில் உள்ளது,எப்படியென்றால் கஞ்சாவிற்கு போதையூட்டும் நச்சு தன்மை இருந்தாலும், அதைப் போக்க சுத்தி முறை என்ற ஒரு முறை சொல்லி அதன் நஞ்சுத் தன்மையை நீக்கி, மருந்தாக தனியாகவும் பிற மருந்துகளுடன் கலந்தும் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். நச்சு தன்மையை நீக்கும் சுத்தி முறைகளை கூறியது மட்டுமல்லாமல் கஞ்சாவால் ஏற்படும் அடிமைத்தனதை  போக்கவும் இலைகள்ளியாதி குடிநீர், சுக்கு குடிநீர் போன்ற மருந்துகளை கூறியுள்ளனர்

                                   பல சித்தர்கள் கஞ்சாவை மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்று கூறியுள்ளனர் ஆனால் அதில் குறிப்பிட்டு சொல்லும்படி கோரக்கர் சித்தர் கஞ்சாவை  மூலாதாரமாக வைத்து பல மருந்துகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளார், அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே அவர் பெயராலே அந்த மூலிகைக்கு அதாவது கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்று பெயர் ஒன்று உண்டு.

கஞ்சாவின் மருத்துவ பயன்:

"மூலக் கிராணியறு முன்புள்ள பேதிகட்டும்

சாலமயக் கும்பசியுஞ் சாருங்காண்ட் தூலஞ்செய்

வாதமொடு ஐயமும்போம் வன்காப்ப னுந்தொலையும்

கோதறுகஞ் சாச்சடைக்கு".

                                                                            - அகத்தியர் குண வாகடம் 

                                   கஞ்சாவினால் மூல நோய்,கிராணி நோய்,பேதி,அதிதூலம்,கப நோய், கரப்பான் நோய் இவை போகும், மிகுந்த பசி,மயக்க நோய் உண்டாக்கும் என கூறப்படுகிறது.

                                  ஆண்மை பெருக கொடுக்கப்படும்  லேகிய  வகைகளில் கஞ்சாவானது ஒரு சிறப்பு மூலப் பொருளாக சேர்க்கப்படுகிறது.இதை சேர்க்கப்படும் போது மருந்தின் வீரிய தன்மை பன்மடங்கு பெருகும்.

                                 பேதியை நிறுத்த பயன்படும் கட்டுவாதி குளிகை போன்ற மாத்திரைகளில் கஞ்சா கசாயம் சேர்க்கப்படுகிறது

                                 கஞ்சா பயன்படுத்துவது இந்தியா கலாச்சாரத்தில் ஒன்று என்றாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும் வட இந்தியாவை சார்ந்ததாக  உள்ளது, நம் ஊரில் ரோட்டோரத்தில் குப்பைமேனி செடியை பார்ப்பது போல் வட இந்தியாவில் கஞ்சா செடி மிகவும் செழிப்பாக வளர்ந்து கிடப்பதை அங்கு சென்றால் நாம் காணலாம்.

                                 இன்று வீதியில் நடமாடும் சாமியார்கள் பல பேர் கஞ்சாவை புகைத்துக் கொண்டு உலவுகின்றனர், இதை பார்த்த சிலர் என்னிடம்  சித்தர்கள் என்றால் கஞ்சா புகைத்துக் கொண்டு இருப்பார்களா ? என சித்தர் பெருமக்களை இழிவுபடுத்தும் விதமாக கேட்பர், சித்தர்கள் கஞ்சா புகைத்தார்களா என்ற கேள்விக்கு நான் கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் புகைத்திருந்தாலும்,அதை மருந்தாக புகைத்திருப்பார்கள் இன்றி போதைக்காக புகைத்திருக்க மாட்டார்கள். இன்று நடைமுறை பட்டிருக்கும் கஞ்சாவின் ஒழுங்கு நடவடிக்கை அக்காலத்திலேயே சித்த மருத்துவத்தில் சித்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அவர்கள் ஒழுக்கத்திக்கு மேற்கண்ட விஷயங்களே சிறு சான்று.

                                மனித மூலையில் ஆயிரக்கணக்கில்  கஞ்சா மூலக்கூறுகளுக்கு ரெசெப்டர்கள் உள்ளதாக ஆராய்ச்சி  முடிவுகள் கூறுகிறது,அனால் ஏன் இவ்வளவு ரெசெப்டர்கள் உள்ளது என மூழுமையான விடை கூறும் முயற்சியில் இன்னும் தற்கால அறிவியல் நடைபொட்டுக்கொண்டுதான் இருக்கிறது ,அனால் மேற் கண்டவற்றை படித்தல் இதற்கான விடை உங்களுக்கே  புரியும். 

நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.


0 comments:

கருத்துரையிடுக