திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

செவ்வாய், 3 ஜனவரி, 2023

மாட்டு இறைச்சியும் தமிழ் மருத்துவமும் - மாட்டு இறைச்சியைப்பற்றி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மருத்துவம் எவ்வாறு விளக்குகிறது

  தமிழ் இலக்கியங்களில் மாட்டு இறைச்சியைப்பற்றிய சில விவரங்கள்:

     இவ்வுலகில் வாழும் பாக்டீரியா முதல் திமிங்கிலங்கள் வரை  புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தத்தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. 
ஒருவரின் உடை மற்றும் உணவுப்  பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்றே.
 தற்போது‌ பல விவாதங்களை அடைந்து வருகின்ற மாட்டு  இறைச்சி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று  என்பது மட்டும் அல்லாமல் தற்போதும் தமிழகத்தின் உணவிலும் மற்றும் நம் நாட்டு ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மாட்டு இறைச்சி பற்றி சங்க காலம் நமக்கு கூறுவது என்ன?
சங்க காலப் பாடல்களில் ஒன்று.
வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309

பசுவை உண்ணல்:
பசுவினைப் பலியை பற்றி செய்தி அகநானூற்றில் காணப்படுகிறது. 
பசு புனிதமாகவும் தெய்வமாகவும் கருதப்படுவதற்கு முன்னர் உணவிற்காகப் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு பசு உணவிற்காகப் பயன்படுத்தப் படுவதைப்
 பின்வரும் நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

    
            வெட்சி வீரர்கள் பால்தரும் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற  கரந்தை வீரர்களைக் கொன்று பசுவை கொண்டுச் சென்றனர்.போகும் வழியில் அவர்களுக்கு பசிக்கவே, கொண்டுச் சென்ற பசுக்களில் கொழுத்தது எது என பார்த்து அதை வெட்டி சமைத்து உண்டார்களாம் (அகம்:309) 
            எருதினைக் கொன்று அதன்    தொடையினை உண்ணல் (அகம்:265) போன்ற செய்திகள்இலக்கியங்களில் காணமுடிகிறது. 
               பசு வதை மற்றும் அதை உணவாக பயன்படுத்துவது போன்ற செய்திகள் நமக்கு கிடைக்க
பெற்றாலும்.மணிமேகலையில் போன்ற நூலில் உயிர்க்கொலை கூடாது,பசுவை கொல்லக் கூடாது போன்ற செய்திகள்இடம்பெறுகிறது."
                ஆனாலும், இன்றும் பசுவை கொன்று உண்ணும் பழக்கம் நம் தமிழகத்தில் இருந்துவருகிறது.
இருந்தாலும் சிலர் இதை உண்பதை தவிர்க்க தான் செய்கிறார்கள்.
     ‌‌           சங்கப் பாடல்களில் “ஊன்” உணவு பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன,யானை,புலி முதலியவைகளை உண்ட வரலாறு கூட உண்டு.
                முக்கியமாகப் பசுவைக் கொன்று தின்ற செய்தி பழைய பாடல் களில்காணப்படுகிறது.

'புலையன் ஆவுரித்துத் தின்றான். பாணன் கன்றை உரித்துத் தின்றான். (நற்3-9) வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர்". (அகம் 129

"சிறுபாணாற்றுப்படை” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” எனக் கூறும் "(175-77) 

                  இங்கு விருந்தாளிகளுக்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச்   சோறும் கொடுத்த செய்தி விவரிக்கப்படுகிறது.
                 உழவர் பெருமக்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு (129)நன்னூல் உரையில் பாணர் பசு இறைச்சியைத் தின்ற செய்தி வருகிறது. (சூத் 310) 
பசுவைக் கொன்று பாறையில் அதன் இறைச்சியைக் காய வைத்த ஒரு நிகழ்ச்சியை அகநானூறுல் இடம்பெற்றுள்ளது (390).
           மேற்கண்டவை மூலம் தமிழ் நாம் அறிவது தமிழ் மக்கள் பசு  தெய்வமாகவும்,அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை உணவாகவும்,இதர தேவைகளுக்கும் பயன்படுத்தினர் என்று அறியப்படுகிறது.

சரி தமிழ் மருத்துவம் மாட்டு இறைச்சியைப்பற்றி என்ன கூறுகிறது:

மாட்டு இறைச்சியின் குணம்:
              மேலே கொடுக்கப்பட்டுள்ளது பாடல் மற்றும் விளக்கம் பதார்த்த குண விளக்கம் என்ற நூலில் இருந்து கிடைக்கப்பெற்றது,இதில் மாட்டின் இறைச்சி உண்பவருக்கு சகல நோய் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 சரி மாட்டின் பால்,நெய்,கோமூத்திரம், சாணம், தயிர்,நெய் இதை பற்றி தமிழ் மருத்துவம் என்ன  கூறி உள்ளது.

பசும் பாலின் குணம்:
பசு மூத்திரம் குணம்:
பசு நெய் குணம்:
பசு வெண்ணெய் குணம்:
பசு மோரின் மருத்துவ குணம்:
பசு சாணத்தின் மருத்துவ குணம்:
  மாட்டின் பால், தயிர்,நெய், சாணம்,கோமூத்திரம் போன்றவை மருத்துவ குணம் பெற்றது என்பது இவற்றில் சில  அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது .
        மாட்டின் இறைச்சி சகல நோய்களை உண்டாக்கும் எனவும்,
 அதன்  இறைச்சி தவிர்த்து இன்ன பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக பதார்த்த குண விளக்கம் நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மக்களின் இறைச்சி வகையுள் மாட்டு இறைச்சி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது,மாட்டின் இறைச்சி அப்படி சகல நோய்களையும் உண்டாக்கும் என்றால் அதற்கான நவின ஆராய்ச்சி முடிவுகள் அவசியம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி
தொடர்புக்கு 8778587349.
இக்கட்டுரை எழுத ஆதாரம்:
1)https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4589:2018-06-14-12-06-16&catid=65:2014-11-23-05-26-56
2)http://fbtamildata.blogspot.com/2017/09/2_21.html?m=1
3) பதார்த்த குண விளக்கம் -காசீம் முகைதீன் ராவுத்தர் 
4)நோய் இல்லா நெறி டாக்டர்- மருத்துவர் கோ துரைராசன்

வியாழன், 29 டிசம்பர், 2022

சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிற (ஆதுலர் சாலை)மருத்துவமனை மற்றும் மருத்துவ குறிப்புகள்.

     சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிற மருத்துவமனை மற்றும் மருத்துவ குறிப்புகள்

          சங்க காலம் தொட்டு கிபி 13ம் நூற்றாண்டுவரை சோழர்கள் தென்னிந்திய பகுதி மட்டும் இன்றி வடக்கு மற்றும் உலகெங்கும் ஆண்ட பெருமை அனைவருக்கும் அறிவோம், தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரிய ஆலயங்களை கட்டியதோர் அல்லாமல் அவ்வாலயங்களில் மக்களின் பிணி தீர்க்க ஆதுலர் சாலை அதாவது மருத்துவமனை போன்றவற்றையும்அமைத்துள்ளனர்.
            இச்செய்திகளை நாம் அறிவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தவை அக்காலத்தில் நம் முன்னோர்கள் செதுக்கிய கல்வெட்டுகளே ஆகும்.
           திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவதுறை, கீரகலூர், கடத்தூர்,  கூகூர் இனிய ஊர்களில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகளில் அக்காலத்து சோழர் பயன்படுத்திய மருத்துவம் பற்றியும் அவர்தம் நடத்திய மருத்துவமனை பற்றியும் விவரங்களை தெரிவிக்கின்றன.

திருமுக்கூடல் ஆதுலர் சாலை
  குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில். கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ள விவரம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வீர சோழன் ஆதுலர் சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடந்து வந்துள்ளது, அங்கு பணிபுரிந்த தலைமை மருத்துவர் பெயர் "கோதண்ட ராம அஸ்வத்தாம பட்டன்" என்று மருத்துவமனை வேலை செய்யும் பணியால் பற்றி விவரம் கிடைக்கப்பெறுகிறது, மேலும் இக் கல்வெட்டில் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் எவ்வளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன என்ற விவரத்தோடு எப்படிப்பட்ட உணவுகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டன அந்த மருந்துகளை எப்படி பாதுகாத்தனர் போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
அக்காலத்தில் வீரசோழன் ஆதுலர் சாலையில் இரண்டு வகை மருத்துவர்கள் இருந்தனர் ஒருவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவர் மற்றொருவர் இரண அறுவை சிகிச்சை செய்பவர்.
அவர்களில் நாடிப் பார்த்து மருந்து கொடுப்பது தலைமை மருத்துவர் "கோதண்ட ராம அசுவத்தாம பட்டன்" இவர் வம்சாவழியாக இத்தொழிலை செய்ய உரிமை பெற்றதோடு இவருக்கு குடையாக 90 கலம் நெல்லும், 80 காசுகளும் அல்லாமல் நிலத்தையும் கொடையாக கொடுத்துள்ளனர், இவ்வாறு மருத்துவத்திற்கு கொடையாக கொடுக்கப்படும்  நிலத்திற்கு மருத்துவகாணி என்று பெயர்.
அறுவை மருத்துவம் செய்பவர்கள் பெயர் "சல்லிய கிரியை(Surgeon) பண்ணுவான்", இவருக்கு 30 கலம் நெல்லும்,1 காசும் ஊதியமாக வழங்கப்பட்டது. 
இவ்வாறே மருத்துவ பணி செய்யும் மகளிர்(Nurse), செடி விறகு சேகரித்து வருபவருக்கும், நாவிதற்கும் மருந்து மூலிகைகளை சேகரித்து வைப்பவருக்கும் திருமுக்கூடல் மருத்துவமனையில் தொழிலுக்கு ஏற்றவாறு ஊதியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு நாவிதர்கள் சவரத் தொழில் செய்வதோடு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்த விவரங்களும் கிடைக்கப்படுகிறது.
 இங்கு பயன்படுத்திய சில மருந்துகளின் விவரம் உத்தம சரணாதி தைலம்,பஞ்சாக தைலம், கண்டீர மண்டூக, வேதிகா லசுணாதி மேலும் கோவிலில் வேதம்,வான நூல், கட்டடக்கலை, மருத்துவம், போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டுள்ளன,அவற்றோடு மாணவர் விடுதி வசதியும் இருந்துள்ளது.

சுந்தர சோழன் விண்ணகர் மருத்துவமனை
    குந்தவை பிராட்டி தன் தந்தையை நினைவாக சுந்தர சோழன் விண்ணகர் ஆதுலர் சாலை மருத்துவமனையை நிறுவி வேலை செய்த மருத்துவருக்கு மருத்துவகாணி வழங்கியதாக கல்வெட்டில் காணப்படுகிறது.

திருப்புகலூர் ஆதுலர் சாலை மற்றும் திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரி:
விக்ரம சோழனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிகாலத்தில் திருப்புகலூரில் ஒரு மருத்துவமனை மற்றும் திருவாவடுதுறை ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவியதாக கல்வெட்டுகள் குறிக்கின்றன.

 பிணி நீங்க இறை வழிபாடு:
      பிணி நீங்க இறைவழிபாடும் கோயில்களில் நடத்தப்பட்டுள்ளன தஞ்சை மாவட்டம் கூகூரில் உள்ள கல்வெட்டில் அதிராஜேந்திரன் தன் பிணி நீங்க வழிபாடு நடத்தப்பட்டதாக காணப்படுகிறது மேலும் கொங்கு நாட்டு மன்னன் சோழ தேவன் உடைய 21 ஆம் ஆட்சி ஆண்டில் அவனுடைய அதிகாரியில் ஒருவரான விக்ரம  சோழ திரிபுவன சிங்கத்தேவன் அவரின் மேகப் நோய் தீர்ந்ததால் அவ்வூர் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதாக கோவை மாவட்டம் கடத்தூரில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
    சாதாரணமாக பயிரிடக்கூடிய செங்கழுநீர்(செவ்வாம்பல்)மூலிகையை சோழர் காலத்தில் பயிரிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற  உத்தர இருந்ததாக காணப்படுகிறது.
   வலுதுளை அல்லது வலுதுணை என்ற கண்டங்கத்தரிக்காய் இது கபம் சம்பந்தமான சுவாசக் கோளாறுகளுக்கு பயன்படுத்தும் மூலிகை இது அக்காலத்தில் பயிரிடப்பட்டதாக சேலம் மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிறது. 
நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 8778587349
கட்டுரை எழுத உதவிய நூல்கள்.
1) சோழர் சமுதாயம் புத்தகம் எழுதியவர் முனைவர் வசந்தி. 
2) மூலிகை மணி இதழ் ஆசிரியர் க.வேங்கடேசன்.
Facebook.kaveri siddha
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL


செவ்வாய், 27 டிசம்பர், 2022

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

இலுப்பை - madhuca longifolia
இலுப்பை - madhuca longifolia 
தென்னகத்தில் வளரும் மர வகுப்பை சார்ந்த தாவரம் ,இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சித்த மருத்துவத்தில் மருந்துகளை தூய்மை ஆக்கவும், வீடு மற்றும் கோயில்களில் விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படுகிறது,சிலர் இந்த எண்ணெயின் மூலம் உணவு சமைத்து உண்கின்றனர்,இதன் புண்ணாக்கு கொசு விரட்டியாக புகை போடவும் மற்றும் அரப்பு போல் தலையில் தேய்த்து குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக அக்காலத்தில் இதன் பூவில் இருந்து சர்க்கரை மற்றும் சாராயம் பெரிய அளவில் தயாரித்து உள்ளனர்.
நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை
Follow us on Facebook:
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL